BJP TVK: பீகாரில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. நீண்ட காலமாகவே தமிழகத்தில் நுழைய முடியாத பாஜக இந்த முறை பீகாரில் பெற்ற வெற்றியை மையப்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முயற்சித்து வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் சுற்று பயணத்தை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
பாஜக வெற்றி பெற வேண்டுமானால் இந்த இரண்டு மட்டும் போதாது. அதற்கு முக்கியமாக விஜய்யின் கூட்டணி அவசியம். இதனால் விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக உள்ளார். இந்நிலையில் பல முன்னணி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதிமுகவை சேர்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைவது கிட்ட தட்ட உறுதியாகியுள்ளது.
இவரை தொடர்ந்து பாஜகவின் முக்கிய தலைவரான, புதுச்சேரியின் பாஜக மாநில தலைவராக நீண்ட காலம் இருந்த, சாமிநாதன் தவெகவில் இன்று இணைய போவதாக செய்திகள் பரவி வருகின்றன. தவெகவை கூட்டணியில் சேர்த்து வெற்றி பெறலாம் என நினைத்த பாஜகவிற்கு, பாஜகவை சேர்ந்த பலரும் தவெகவில் இணைந்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் கொள்கையை ஏற்காத தமிழக மக்கள், இந்த முறை விஜய் வருகையால் பாஜகவை எதிர்க்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

