TVK VCK DMK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய், தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலானா நிலையில், இதற்கு இளைஞர்களின் ஆதரவு அதிகளவில் உள்ளது. அனைத்து கட்சிகளும் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்கை மட்டுமே நம்பியிருந்த நிலையில் விஜய்கான இந்த வரவேற்பு மாநில கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற கட்சிகளை விட ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தான் இளைஞர்கள் வாக்கை அதிகமாக நம்பியிருந்தது.
இப்படி இருக்க விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அந்த வாக்குகள் எல்லாம் திமுகவின் எதிர்ப்பு வாக்குகளாக மாறும் ஆபாயம் உள்ளது. இதன் காரணமாக திமுகவின் கூட்டணி கட்சிகளும், விஜய்யின் தவெகவை பயங்கரமாக எதிர்த்து வருகின்றனர். ஆனால் தற்போது திமுகவில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் விசிக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தும், அதன் நன்மைக்கான வழியையும் கூறியுள்ளது. செங்கோட்டையன் தவெகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த விசிகவின் தலைவர் திருமாவளவன், இதற்கு பின்னால் வேறு அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நண்பர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவரது கட்சியில் சங்கிகள் அல்லது சங்க பரிவார அமைப்புகளை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி பரவி வருகிறது. மேலும் ஊடுருவல்கள் நிகழ்ந்தால் அது அவரது அரசியலையே கேள்விக்குறியாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். திமுக விஜய்யை கடுமையாக எதிர்த்து வரும் சமயத்தில், திருமாவளவன் விஜய்க்கு ஆதரவாகவும், அவரது அரசியல் வாழ்க்கையை பற்றி கவலைப்படுவதும் திமுக கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

