TVK: அதிமுக துவங்கப்படத்திலிருந்தே அதில் முக்கிய முகமாகவும், தலைவர்களுக்கு மிக நெருங்கியவருமாக இருந்த செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கட்சியில் இருப்பதே தெரியாமல் போய் விட்டது. மேலும் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதற்கு காரணம் ஒருங்கிணைப்பு இல்லாதது என அவர் நினைத்தார். அது மட்டுமல்லாமல் இபிஎஸ் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே செங்கோட்டையனுக்கு கட்சியில் மதிப்பு குறைந்து விட்டது. இதனை சரி செய்ய வேண்டுமானால் பிரிந்த தலைவர்களை அதிமுகவில் ஒருங்கிணைத்து அவர்களை இபிஎஸ்க்கு எதிராக திருப்ப வேண்டுமென அவர் திட்டம் தீட்டினார்.
இதனை அறிந்த இபிஎஸ் அவரை கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு நால்வர் அணியாக இவர் செயல்படுவார் என்று நினைத்த சமயத்தில், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இன்று, விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார். இவர் அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்டது கட்சிக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமோ, அதே போல் தவெகவில் இணைந்தது அவர்களுக்கு லாபமாக அமைந்துள்ளது. இந்நிலையில் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது விஜய்க்கு மிகவும் மகிழ்ச்சியளித்த நிலையில், இது குறித்து விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய தவெக தலைவர் விஜய், 20 வயதிலேயே எம்எல்ஏ என்ற பெரிய பதவியை வகித்தவர் செங்கோட்டையன். 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையனின் அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருடன் இணைந்து நம்புடன் பணியாற்ற கை கோர்த்த அனைவரையும் மக்களும் பணியாற்ற வரவேற்கிறேன் என்று பேசியுள்ளார். இவரின் இந்த வீடியோ தற்போது, பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும், கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் அரசியல் ரீதியாக விஜய் வெளியிட்ட முதல் வீடியோ இதுவே ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

