TVK ADMK: இபிஎஸ் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது மட்டுமல்லாமல், மக்களின் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி இருக்கும் சமயத்தில் உட்கட்சி விவகாரமாவது சரியாக இருக்கும் என்று பார்த்தால், அதிலும் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தன. இதற்கு முக்கிய காரணம் இபிஎஸ் மூத்த அமைச்சர்களின் கருத்தை கேட்காமலும், அவர்களை மதிக்காமலும் இருந்தது தான் என அதிமுகவை சேர்ந்தவர்கள் கூறி வந்தனர். தற்போது அந்த நிகழ்வு வெளிச்சம் போட்டு கட்டப்பட்டுள்ளது.
தன்னை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அது யாரென்று கூட பாராமல் கட்சியை விட்டு நீக்குவது இபிஎஸ்யின் பழக்கமாக மாறி விட்டது. அப்படி தான் செங்கோட்டையனின் நீக்கம் நிகழ்ந்தது. கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவுடன், இன்று தவெகவில் இணைந்துள்ளார். இபிஎஸ் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டுமென எவ்வளவு முயற்சித்தும் அது நடக்கவில்லை. இதனால் முதலில் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை இணைத்து விட்டு பிறகு விஜய்யை பார்த்து கொள்ளலாம் என்று நினைத்த, இபிஎஸ்க்கு செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது ஆட்டத்தையே மாற்றி விட்டது.
தவெகவில் சேர்ந்த இவரின் குறிக்கோள் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பது அல்ல. எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற கூடாது என்பது தான். இதனால் விஜய் அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டால், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிடும். இதன் காரணமாக எந்த காரணத்திற்காகவும், விஜய் அதிமுக பக்கம் சென்று விட கூடாது என்பதில் செங்கோட்டையன் தெளிவாக இருந்தார். தற்போது தவெகவில் இணைந்த கையுடன் அவர் தனது முதல் வேளையாக இதனை தான் செய்வார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

