செங்கோட்டையன் மீது இபிஎஸ் சரமாரி தாக்கு.. ஆச்சரியத்தில் அரசியல் களம்!!

0
75
EPS barrage attack on Sengottaiyan.. Political field in surprise!!
EPS barrage attack on Sengottaiyan.. Political field in surprise!!

ADMK TVK: அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு வைத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் அவரை பதவிகளிலிருந்து நீக்கினார். இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்களுடன் செங்கோட்டையன் சேர்ந்ததால் அவர் கட்சியை விட்டு அடியோடு நீக்கபட்டார். இவ்வாறு கட்சி பலவீனமடைந்து வருவதை உணர்ந்த இபிஎஸ் கட்சியை பலப்படுத்த விஜய் கூட்டணியை தேர்வு செய்தார்.

ஆனால் விஜய் முதல்வர் வேட்பாளர் பதவியில் இருந்து பின் வாங்கவில்லை. ஆனாலும் இபிஎஸ் விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் பணியை கைவிடவில்லை. இதனை அறிந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற கூடாது என்பதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, அடுத்த நாளே தவெகவில் இணைந்தார். இந்நிலையில் செங்கோட்டையனை விமர்ச்சித்தால் அது விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதற்கு சமம். இதனால் இபிஎஸ் அவரை விமர்ச்சிக்காமல் விட்டுவிடுவார் என்று பலரும் நினைத்தார்.

ஆனால் நேற்று செங்கோட்டையனின் கோட்டை என கருதப்படும் கோபிச்செட்டிபாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி, செங்கோட்டையனை தாக்கி பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கோபியில் அதிமுக தோற்க்கடிக்கப்படும் என்று யாரோ கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள், அதை உடைத்து விட்டீர்கள் என்றும், அதிமுகவிற்குள் இருந்து கொண்டே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டவர் செங்கோட்டையன் என்றும் பேசியிருந்தார். இவரின் இந்த கருத்து விஜய்யையும் சேர்த்து விமர்சித்திருப்பது போல உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Previous articleஇத்தனை தொகுதிகள் வேண்டும்.. பாஜக கூட்டணி கட்சி கறார்!! ஷாக்கில் அமித்ஷா!!