கரூர் துயரம்.. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போட்ட மனு!! ஆடிப்போன விஜய்!!

0
120
Karur Tragedy..Tamil Nadu Govt Filed Petition in Supreme Court!! Vijay who is rocking!!
Karur Tragedy..Tamil Nadu Govt Filed Petition in Supreme Court!! Vijay who is rocking!!

DMK TVK: சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக விஜய் மாற்றியுள்ளார். இவர் கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை தவெகவுக்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் 2 மாபெரும் மாடுகளையும், 5 பிரச்சார கூட்டங்களையும் நடத்திய விஜய்க்கு அவரது அரசியல் வாழ்க்கையை அடியோடு வீழ்த்தும் வகையில் அமைந்தது தான் கரூர் சம்பவம். விஜய் பிரபலமான நடிகர் என்பதால் அவரை காண கூடிய கூட்டம் காரணமாக 41 பேர் உயிரிழந்ததுடன், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த செய்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த அசம்பாவிதம் திமுகவின் முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜியின் தொகுதியில் நடைபெற்றதால் இதற்கு திமுக அரசு தான் காரணம் என தவெக கூற, தவெகவின் அரசியல் அறியாமை தான் காரணம் என திமுக அரசு கூறி வந்தது. இதனை முடிவுக்கு கொண்டு வர, திமுக அரசு தனி நபர் குழுவை அமைத்தது. ஆனால் ஆளுங்கட்சி மீது தவெகவிற்கு சந்தேகம் இருப்பதால், இந்த வழக்கை திமுக அரசு அமைத்த குழு விசாரிக்க கூடாது, சிபிஐக்கு கை மாற்ற வேண்டும் என விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்து வரும் சிபிஐ, நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களான புஸ்ஸி ஆனந்த, ஆதவ் அர்ஜுனா, மதியழகன், நிர்மல் குமார் போன்றோரிடம் சுமார் 18 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதை ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வந்த தமிழக அரசு தற்சமயம், கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கூடாது என உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும் தமிழக அரசு அமைத்த அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு இதனை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், அதனை ரத்து செய்யவும், இந்த குழுவின் பணிகள் தொடர அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளது. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு கரூர் சம்பவத்தில் திமுக அரசின் சதி இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Previous articleசெங்கோட்டையனால் தினகரனை மறந்த விஜய்.. தள்ளாடும் அமமுக!! கொண்டாட்டத்தில் இபிஎஸ்!!