ADMK DMK BJP: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். சில தினங்களுக்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டிய ஓபிஎஸ், டிசம்பர் 15 க்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். இது நடக்கவில்லை என்றால், இபிஎஸ்க்கு எதிராக புதிய கட்சி துவங்கப்படும் என்பது போன்ற தொனியில் பேசியிருந்தார்.
இது குறித்து இபிஎஸ் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் நேற்று திடீரென ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொண்டார். இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஓபிஎஸ் கூறினாலும், அமித்ஷாவிடம் அவர் சில கோரிக்கைகளையும், நிபந்தனைகளையும் முன் வைத்ததாக கூறப்படுகிறது. பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க பாஜக உதவ வேண்டும் என்றும், அதிமுகவில் சேர்ந்த உடன் அதில், எனக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இவை இரண்டும் நடைபெறவில்லை என்றால் திமுகவில் சேர்ந்து விடுவேன் என்று ஓபிஎஸ் கறார் காட்டியதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஓபிஎஸ்யின் இந்த செயலால் அமித்ஷா ஆழ்ந்த யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவின் முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்தது பாஜகவிற்கு பேரிடியாக இருக்கும் நிலையில், ஓபிஎஸ்யின் நிலைப்பாடு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

