ADMK: ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இபிஎஸ் பதவியேற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தலிலும் தோல்வி தான் என்பது போல சில நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. முதலில் இபிஎஸ் பதவியேற்ற உடனேயே அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், போன்றறை நீக்கினார். இதன் பின்னர் டிடிவி தினகரன் தனிக்கட்சி துவங்கிய நிலையில், ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என ஓபிஎஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது கை கூடவில்லை.
இந்நிலையில் அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு, ஓபிஎஸ், தினகரன் போன்றோர் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் இபிஎஸ் கூட்டணி அமைத்தார். அப்போது இந்த நிபந்தனை நிறைவேற்றபடவில்லை. ஆனால் அண்மையில் நயினாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், இபிஎஸ்க்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் கூறி ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்தும் வெளியேறினார். இந்த இக்கட்டான சூழலில், அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தை கூட்டிய ஓபிஎஸ், டிசம்பர் 15 க்குள் அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்த நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும்.
இல்லையென்றால், என்னுடைய நடவடிக்கைகள் வேறு மாதிரி இருக்கும் என்றும், தனிக்கட்சி ஆரம்பிக்கப்படும் என்ற தொனியில் எச்சரித்திருந்தார். மேலும் ஓபிஎஸ்யின் ஆதரவாளரான வைத்தியலிங்கம், ஓபிஎஸ் தலைமையில் தனிக்கட்சி ஆரம்பிக்கபடும் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ்யின் பேச்சில் மாற்றம் தெரிகிறது. இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், அமித்ஷாவை சந்தித்தது குறித்து பேசிய அவர், நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக எப்போதும் சொல்லவில்லை என்று கூறினார். இவரின் இந்த பதில், அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.

