அதிமுகவில் புதிய தலைமை.. இபிஎஸ்யை ஓரங்கட்ட பாஜக போடும் பிளான்!!

0
160
New leadership in AIADMK.. BJP's plan to marginalize EPS!!
New leadership in AIADMK.. BJP's plan to marginalize EPS!!

ADMK BJP: 2026 யில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாதியளவு தொகுதிகளில் மக்கள் சந்திப்பை முடித்த நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தலை கருத்தில் கொண்டு இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக தற்சமயம் அதிமுகவை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் அதனை தரை மட்டமாக்கும் நோக்கில் உள்ளது. மேலும் அதிமுகவின் வருகையால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து விலகினார்கள். தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீகத்தை அதிகரித்த அண்ணாமலையின் பதவி பறிக்கபட்டதற்கும் இபிஎஸ் தான் காரணம்.

இதனால் தமிழக மக்கள் மட்டுமல்லாது, பாஜகவை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் கூட அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை தொடர்ந்தால் அது தேர்தல் முடிவில் பாதகத்தை ஏற்படுத்தும் என பாஜக நினைப்பதால், பழனிசாமிக்கு எதிராக அதிமுகவில் ஒரு அணியை திரட்டி, அந்த அணியில் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக தான் ஒபிஸ்யும், அண்ணாமலையும் தனித்தனியாக சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளனர் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Previous articleசெங்கோட்டையன் செயலால் வருத்தப்பட்ட சசிகலா.. இப்படி பண்ணுவாருனு நினைக்கல!!
Next articleஅதிமுகவில் ரீயூனியன்.. ஒருங்கிணைப்பாளர் இவர் தான்!! ட்விஸ்ட் வைத்த சசிகலா!!