டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த உதயநிதி ஸ்டாலின்.. கூட்டணிக்கு அச்சாரமிட்ட பேச்சு!!

0
168
Udhayanidhi Stalin who supported TTV Dhinakaran.. Threatened the alliance!!
Udhayanidhi Stalin who supported TTV Dhinakaran.. Threatened the alliance!!

DMK AMMK: தமிழகத்தில் தற்சமயம் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த காலகட்டத்தில் கூட்டணி இல்லாமல் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, திமுகவும் ஒரு குழு அமைத்த உடன் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக பேசப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைய வாய்ப்பிருப்பது போல, அந்த கட்சிக்கு ஆதரவாக பேசியுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருப்பதை ஏற்க மறுத்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். மேலும் தனது எல்லா உரைகளிலும், துரோகம் வீழ்த்தப்படும், எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கபடுவார் என்று கடுமையாக கூறி வந்தார்.

பாஜகவிலிருந்து வெளியேறிய இவர், தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரின் செயல்பாடுகள், திமுக, நால்வர் அணி, தவெக அனைத்திற்கும் ஆதரவு அளிப்பது இருந்ததால், அமமுகவின் கூட்டணி கேள்விக்குறியாகவே இருந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று தினகரன் எல்லா இடத்திலும் கூறி வந்த கருத்தை, தற்போது துணை முதல்வர் உதயநிதியும் முன்மொழிந்துள்ளார்.

செஞ்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து பேசிய இவர், வழக்கம் போல அதிமுகவையும், பாஜகவையும் வஞ்சித்து விட்டு, ஓபிஎஸ், செங்கோட்டையன், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலேயே இருக்கிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் தினகரனுக்கு பாஜக உடன் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இவர் விரைவில் திமுக கூட்டணியில் இணைவார் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.

Previous articleஅதிமுகவில் ரீயூனியன்.. ஒருங்கிணைப்பாளர் இவர் தான்!! ட்விஸ்ட் வைத்த சசிகலா!!
Next articleஅதிமுக முன்னாள் அமைச்சரை லாக் செய்த செங்கோட்டையன்.. கொண்டாட்டத்தில் தவெக!!