நாஞ்சில் சம்பத் விஜய்யிடம் கேட்ட முக்கிய பொறுப்பு.. ராஜ் மோகனுக்கு புல்ஸ்டாப்!!

0
212
Important responsibility asked from Sampath Vijay in Nanji.. Fullstop for Raj Mohan!!
Important responsibility asked from Sampath Vijay in Nanji.. Fullstop for Raj Mohan!!

TVK: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே அவருக்கு பெருகி வரும் ஆதரவை கண்கூடாக பார்க்க முடிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட போகிறது என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து அந்த கட்சியில் இளைஞர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தான் மக்களை சந்திக்கும் பணியை தொடங்கிய விஜய் 5 இடங்களில் பிரச்சாரத்தை முடித்தார். ஆறாவதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது 41 பேர் உயிரிழந்தனர். இதனால் தவெக வெளியில் தலை காட்டமலிருந்தது. இதனை தொடர்ந்து தவெக சார்பில் சிறப்பு பொதுக்குழு ஏற்பாடு செய்யப்பட்டது அக்கட்சி மீண்டும் புத்துயிர் பெற்றதை உணர்த்தியது.

விஜய்க்கு அரசியலில் ஆதரவு அதிகளவில் இருந்தாலும், அவருக்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற காரணத்தை வைத்தே அவரை பின்னுக்கு தள்ளப்பார்த்தனர். இந்நிலையில் தான்  50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்து அதன் வலிமையை கூட்டினார். இவரை தொடர்ந்து திமுகவில் தலைமை கழக பேச்சாளாராக இருந்த நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். இவர் ஆரம்பத்திலிருந்தே விஐய்க்கு ஆதரவு தெரிவித்து வந்ததால், இவர் தவெகவில் இணைவார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.

தவெகவில் இணைந்த கையுடன் பல்வேறு விசியங்களை பகிர்ந்த இவர், தவெகவின்  பிரச்சார செயலாளர் பதவியை விஜயிடம் கேட்டதாக கூறியுள்ளார். இந்த பொறுப்பில் ஏற்கனவே ராஜ் மோகன் இருக்கும் நிலையில் இவரும் இந்த பதவியை கேட்டிருப்பது விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தவெகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கும், புஸ்ஸி ஆனந்த்க்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல் எழுந்த நிலையில், தற்போது இந்த சவாலையும் விஜய் எவ்வாறு எதிர் கொள்ள போகிறார் என்பது தெரியவில்லை.

Previous articleஅதிமுக முன்னாள் அமைச்சரை லாக் செய்த செங்கோட்டையன்.. கொண்டாட்டத்தில் தவெக!!
Next articleதவெகவுக்கும் எனக்கும் தான் போட்டி.. விஜய் தொகுதியில் போட்டியிடும் வலுவான வேட்பாளர்!!