தவெகவின் சின்னம் இது தானா.. வெளியான டாப் சிக்ரெட்!! செம்ம குஷியில் விஜய்!!

0
949
This is TVK 's symbol.. Top Secret Released!! Vijay in Semma Khushi!!
This is TVK 's symbol.. Top Secret Released!! Vijay in Semma Khushi!!

TVK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை தமிழக மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கிறனர். மக்களை சந்திக்கும் பணிகளும், தொகுதி பங்கீடு, கூட்டணி வியூகங்கள் போன்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், நடிகர் விஜய் கட்சி ஒன்றை துவங்கியுள்ளார். இவர் கட்சி தொடங்கியதிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இந்த எதிர்பார்ப்பை அடியோடு நசுக்கும் வகையில் நிகழ்ந்தது தான் கரூர் சம்பவம். இதற்கு பின் விஜய்யின் அரசியல் பயணம் முடிந்து விடும் என அனைவரும் நினைத்த சமயத்தில் தான் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

தவெகவுக்கு ஆதரவு அதிகளவில் இருந்தாலும், விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து மேலோங்கி இருந்தது. இவ்வாறான நிலையில் தான் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவின் காட் பாதராக அதில் இணைந்தார். இப்படி  தவெகவில் பல்வேறு திருப்பங்கள் நிலவி வரும் சமயத்தில், தவெக சட்டசபை தேர்தலில் போட்டியிட சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் கடிதம் வழங்கியுள்ளது. அதில், ஆட்டோ, கிரிக்கெட் பேட் , விசில், வெற்றி கோப்பை, உள்ளிட்ட சின்னங்களில் ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

இந்த சின்னங்கள் அனைத்தும் பாமர மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சின்னமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தவெகவின் சின்னம் குறித்து பேசிய செங்கோட்டையன், தவெகவிற்கு சின்னம் கிடைக்க போகிறது, அந்த சின்னத்தை பார்த்து நாடே வியப்படைய போகிறது என்று கூறியுள்ளார். அந்த சின்னம் பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது. தவெக தனது முதல் தேர்தலிலேயே வெற்றியை இலக்காக கொண்டுள்ளதால் அதற்கு வெற்றி கோப்பை சின்னமாக கிடைத்துள்ளது என பலரும் கூறுகின்றனர். இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்த பாடாத நிலையில், இதனை தான் செங்கோட்டையன், எங்களது சின்னத்தை பார்த்து நாடே வியப்படைய போகிறது என்று கூறியிருப்பார் எனவும் யூகிக்கப்படுகிறது.

 

Previous articleவடக்கே வன்னியர்.. மேற்கில் கொங்கு வெள்ளாளர்! அதிமுகவில் அடிக்கும் அடுத்த புயல்! எடப்பாடி தலை தப்புமா?
Next articleசின்னம்மா சொன்னது ரொம்ப தப்புங்க.. ஏற்க மறுக்கும் டிடிவி தினகரன்!! அப்செட்டில் சசிகலா!!