அன்புமணி வந்துடுவாரு.. ராமதாஸ் பக்கம் திரும்பிய விஜய்!! ஷாக்கில் ஸ்டாலின்!!

0
219
Anbumani will come.. Vijay turned to Ramadas!! Stalin in shock!!
Anbumani will come.. Vijay turned to Ramadas!! Stalin in shock!!

TVK PMK: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடன் எந்த கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க போகிறது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. விஜய் காங்கிரஸுடன் நட்பாக பழகி வருவதால் அக்கட்சியுடன் கூட்டணி உறுதியாகியுள்ளது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது. மேலும் விஜய் தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் என்று அரசியல் ஆர்வலர்கள் பலரும் கூறினார்.

பாமக இரண்டாக பிரிந்து இருக்கும் பட்சத்தில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், பாமகவின் ஒரு அணியாவது தவெகவில் சேர்ந்தால் தான் இபிஎஸ்யை தோற்கடிக்க முடியும் என்று விஜய்க்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

இதனால் முதலில் அதிமுக பக்கம் இருக்கும் அன்புமணியை தவெகவில் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கு, அன்புமணி ஆதரவு தெரிவித்து வருவதால், அவர் சுலபமாக தவெகவில் சேர்ந்து விடுவார் என விஜய் நினைக்கிறார். இதனால் அடுத்தபடியாக தவெகவின் அரசியல் எதிரியான திமுக உடன் ராமதாஸ் இணைவதை தடுக்க அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது என்று தவெகவின்  நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Previous articleசின்னம்மா சொன்னது ரொம்ப தப்புங்க.. ஏற்க மறுக்கும் டிடிவி தினகரன்!! அப்செட்டில் சசிகலா!!
Next articleஅண்ணாமலை ஓபிஎஸ்யின் அதிரடி முடிவு.. அண்ணாந்து பார்க்கும் இபிஎஸ்!! காரணம் அமித்ஷாவா!!