அண்ணாமலை ஓபிஎஸ்யின் அதிரடி முடிவு.. அண்ணாந்து பார்க்கும் இபிஎஸ்!! காரணம் அமித்ஷாவா!!

0
305
Action result of Annamalai OPS.. EPS to watch!! The reason is Amit Shah!!
Action result of Annamalai OPS.. EPS to watch!! The reason is Amit Shah!!

ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையில் விஜய்யின் அரசியல் பிரவேசம், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை. போன்றவை உத்வேகம் எடுத்துள்ளன. தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுக பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. அதிலும் முக்கியமாக செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இபிஎஸ்யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் நான்கு தினங்களுக்கு முன்பு டெல்லியில் முகாமிட்டு அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் பிறகு, தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். இவர்கள் இருவரும் எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதால் இவர்களை அமித்ஷா சந்தித்து பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அமித்ஷாவிடம் தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி கலந்துரையாடினோம் என இருவரும் கூறினார்கள். ஆனால் இருவரும் இணைந்து தனிக்கட்சி ஆரம்பிக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. பாஜகவின் தற்போதைய நோக்கம் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு திமுகவிற்கு எதிரான பலமான கட்சியாக தமிழகத்தில் நிலைபெற வேண்டும் என்பதே ஆகும்.

இதற்கு இபிஎஸ்க்கு எதிரான பலமான கூட்டணியை உருவாக்க வேண்டும். டிசம்பர் 15 க்குள் அதிமுக ஒருங்கிணையவில்லை என்றால் தனிக்கட்சி ஆரம்பிக்கபடும் என்ற தொனியில் ஓபிஎஸ்யின் பேச்சு இருந்தது. இபிஎஸ்யால் பதவியை இழந்த அண்ணாமலை தனிக்கட்சி துவங்க போவதாக வெளியான தகவலை அவர் மறுக்காததால் இவர்கள் இருவரும் இணைந்து இபிஎஸ்க்கு எதிராக கட்சி துவங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையும், ஓபிஎஸ்யும் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறிது நேரம் கட்சி ஆரம்பிப்பதை பற்றி அவர்களது கருத்தை பரிமாறி கொண்டனர் என்றும் அவர்களது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Previous articleஅன்புமணி வந்துடுவாரு.. ராமதாஸ் பக்கம் திரும்பிய விஜய்!! ஷாக்கில் ஸ்டாலின்!!
Next articleபதவி சுகத்தை அனுபவித்த செங்கோட்டையன்.. துரோகம் செய்துவிட்டார்!! கடிந்து கொண்ட புகழேந்தி!!