சசிகலாவுக்கு நோ என்ட்ரி.. கதவை மூடிய விஜய்!! அதோகதியாகும் சின்னம்மா நிலை!!

0
172
No entry for Sasikala.. Vijay closes the door!! What a terrible situation!
No entry for Sasikala.. Vijay closes the door!! What a terrible situation!

TVK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து வருகிறது. அதிமுகவும் இந்த முறையாவது வெற்றி பெற போராடி வருகிறது. இந்நிலையில் தான் புதிதாக உதயமான தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே ஆட்சியை தன் வசப்படுத்த முயற்சித்து வருகிறது. விஜய்யின் இந்த அரசியல் பிரவேசம் திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை ஆட்டம் காண வைத்துள்ளது.

இதனை பொறுக்க முடியாத கட்சிகள் அவரை பின்னுக்கு தள்ள ஒரே ஒரு காரணத்தை மட்டுமே வைத்துள்ளன. அது தான் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கூற்று. தவெக தொண்டர்களுக்கும், தலைவருக்கும் அரசியல் அறிவு இல்லை என்ற கருத்து பரவலாக பேசப்பட, அதனை முறியடிக்கும் வகையில் அமைந்த நிகழ்வு செங்கோட்டையனின் தவெக இணைவு. அதிமுகவின் மூத்த நிர்வாகியான இவர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோருக்கே அரசியல் வியூகம் வகுத்து கொடுத்தவர்.

இப்படி பட்ட அரசியல் தலைவர் புதிய கட்சியில் இணைந்தது விவாதங்களுக்கு வலி வகுத்தது. இவர் தவெகவில் இணைந்த கையுடன் பல்வேறு அதிமுக தலைவர்களும் தவெகவுக்கு வர உள்ளனர் என்று கூறினார். அவர்களில் முதன்மையானவர்கள் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றவர்களாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் தற்போது வரை யாரும் இணைந்த பாடில்லை. இதனால் இவர்கள் தவெகவில் இணைவதை விஜய் விரும்பவில்லை என்ற செய்தியும் பரவியது.

இந்நிலையில், செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது தவறு என்பது போல சசிகலா பேசியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் சசிகலாவை கட்சியில் சேர்க்கவே கூடாது என்ற முடிவில் உறுதியாக உள்ளார் என்று பலரும் கூறுகின்றனர். ஏற்கனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டும், நால்வர் அணியில் தனித்து விடப்பட்டதாகவும் தொடர்ந்த சசிகலாவின் நிலைமை, விஜய்யின் முடிவால் மேலும் மோசமாகும் என்று மதிப்பிடப்படுகிறது. 

Previous articleபதவி சுகத்தை அனுபவித்த செங்கோட்டையன்.. துரோகம் செய்துவிட்டார்!! கடிந்து கொண்ட புகழேந்தி!!
Next articleஓபிஎஸ் இணைய போகும் கட்சி இது தானா.. சஸ்பென்ஸை உடைத்த பெங்களூரு புகழேந்தி!!