தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா.. அமித்ஷா சொன்ன வார்த்தை!! கலக்கத்தில் இபிஎஸ்!!

0
148
Coalition government in Tamil Nadu.. Amit Shah's words!! EPS in the mix!!
Coalition government in Tamil Nadu.. Amit Shah's words!! EPS in the mix!!

ADMK BJP: இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியான பாஜக பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தனது கண்ணோட்டத்தை திருப்பியுள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக வேறு சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியையும், மேற்கொண்டு வருகிறது. மேலும் அதிமுக தலைமையிடம் பல்வேறு நிபந்தனைகளையும் முன்வைத்து வருகிறது. அதிமுக கொங்கு மண்டல பகுதிகளில் வலுவாக இருப்பதால், அந்த தொகுதிகளில் நின்று வெற்றி பெற வேண்டுமென பாஜக நினைக்கிறது.

ஆனால் பாஜகவிற்கு வட மாநிலங்களில் அதிகளவில் செல்வாக்கு இருந்தாலும் தமிழகத்தில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இப்படி இருக்கும் நிலையில், அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை அதற்கு ஒதுக்கினால் அங்கு அதிமுக தோல்வியை தழுவும் என்பது 100% உண்மை. இந்த பிரச்சனை ஒரு புறம் இருக்க, தமிழக அரசியல் மரபில் இல்லாத ஒரு கருத்தை பாஜக முன் வைத்துள்ளது. அது தான் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை. அதிமுகவை சேர்ந்த பலரும் பாஜக கூட்டணியில் மட்டும் தான் உள்ளது, தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வந்தனர்.

ஆனால் பாஜகவை சேர்ந்தவர்களோ தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், கூட்டணி ஆட்சி குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமலும் சென்றது பாஜக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி விடும் என்பதை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து எதுவும் கூறாமலிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிலும் பாரதிய ஜனதா கூட்டணி தான் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என்றும் உறுதியுடன் கூறியுள்ளார். தற்சமயம் அதிமுக, பாஜக கூட்டணியை மட்டுமே நம்பியுள்ள நிலையில், அந்த கட்சியும் இது போன்ற நிபந்தனையை முன் வைத்திருப்பது இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Previous articleகாங்கிரஸின் முக்கிய தலையை சந்தித்த விஜய்யின் தந்தை.. என்னவா இருக்கும்!!
Next articleதினகரன் கூட கூட்டணி சேருங்க.. இல்லன்னா தனிக்கட்சி தொடங்குங்க!! பாஜக போட்ட ஆர்டர்!!