ADMK TVK: சமீப காலமாகவே அதிமுகவில் ஏற்பட்டு வரும் சிக்கல்கள் அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியது, ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை ஆரம்பித்தது, சசிகலா அரசியலிலிருந்து விலகி இருப்பது, செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்தது போன்றவை பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது. தவெகவில் சேர்ந்த செங்கோட்டையன் அதிமுகவின் மேல் அதிருப்தியில் உள்ள பலரும் தவெகவில் சேரப்போகிறார்கள் என்று கூறியிருந்தார். அதன்படி அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல்வேறு அமைச்சர்களுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் 18 ஆம் ஈரோட்டில் நடக்க இருக்கும் தவெக பிரச்சாரத்தில் இவர்கள் அனைவரும் இணைவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில காலமாகவே இபிஎஸ்யின் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ராஜ்மோகனை சந்தித்துள்ளார். இது மரியாதையை நிமித்தமான சந்திப்பாக தெரியவில்லை என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால், அதிருப்தி அமைச்சர்களை ஒன்று சேர்ப்பேன் என்று செங்கோட்டையன் கூறியதால் இது சேர்க்கைக்கான சந்திப்பு தான் என்று யூகிக்கப்படுகிறது. இது குறித்து அதிகார பூர்வமான தகவல் வெளிவராத நிலையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் பலரும் தவெகவில் இணைந்து வருவது இபிஎஸ்க்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அதிமுகவை சேர்ந்தவர்கள் கூறுகின்றார். இந்த நிலையிலாவது இபிஎஸ் தனது முதல்வர் பதவியிலிருந்து கீழிறங்கி தவெக தலைமையில் கூட்டணி அமைப்பாரா என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

