ADMK TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களமும், கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. கூட்டணி வியூகங்கள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக செயல்படுத்தபட்டு வருகிறது. அதே நேரத்தில், 2021 தேர்தலில் தோல்வியுற்ற அதிமுக இந்த முறையாவது வெற்றி பெற வேண்டுமெனவும், ஆட்சியை தன் வசப்படுத்திய வைக்க வேண்டுமென திமுகவும் பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்து வருகிறது. இவ்வாறான நிலையில் தான், நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி, மேலும் பரபரப்பை கூட்டினார்.
அது மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பல்வேறு விசியங்களை பகிர்ந்தார். விஜய் தனது முதல் மாநாட்டிலேயே, திமுகவை அரசியல் எதிரி என்று கூறியிருந்ததார். இதனால், இவர் தன்நிலை மாறாமல் இருப்பார் என்று நினைத்த சமயத்தில் செங்கோட்டையனின் தவெக இணைவு அதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் சமீபத்தில் தவெகவில் இணைந்து, அதிமுக அதிருப்தியாளர்களை ஒன்றிணைப்பேன் என்று கூறி சபதம் எடுத்தார். அதற்கான வேலைபாடுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து திமுகவை தவிர்த்து அதிமுகவை, தவெகவின் எதிரியாக்க செங்கோட்டையன் முயல்வதாக தெரிகிறது.
இவரின் செயல்பாடுகளும் அதனை உறுதிப்படுத்தும் நோக்கிலே அமைந்துள்ளன. தவெகவிற்கு எந்த கட்சி போட்டி என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தவெகவிற்கு போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து விஜய் தனது அரசியல் எதிரியை மாற்றி விட்டார் என்றும், இத்தனை நாளாக அதிமுகவை மறைமுக அரசியல் எதிரியாக வைத்திருந்தார் என்பதும் நிரூபணமாகிறது. செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த பின்னர் அதிமுகவும் அரசியல் எதிரி தான் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.