ADMK BJP: அடுத்த 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைவரும் தீவிர ஈடுபாட்டில் உள்ளனர். மேலும் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவும் என்று கணிக்கப்படுகிறது. அதிமுக, திமுகவின் போட்டியை மட்டுமே எதிர்கொண்ட தேர்தல் களம் தற்போது, நாதக, தவெகவின் தாக்கத்தையும் எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இது அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. நான்கு முனை போட்டியே திராவிட கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் பட்சத்தில், அதிமுகவில் பல்வேறு பூகம்பங்கள் வெடித்து வருகின்றன.
அதிமுக தற்போது பல அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில், பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக, அதனை மையமாக வைத்து அதிமுகவிடம் அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் பெற முயற்சித்து வருகிறது. ஆனால் இபிஎஸ் பாஜகவிற்கு தமிழகத்தில் அதிகளவில் செல்வாக்கு இல்லாத காரணத்தினாலும், இதுவரை ஆட்சியில் பங்கு என்றே மரபே இல்லையென்ற காரணத்தினாலும், இவர்களின் கோரிக்கையை இன்னும் பரிசீலிக்காமல் உள்ளார். இதனால் விரக்தியடைந்த பாஜக, பிரிந்தவர்களை பாஜகவில் ஒன்றிணைத்து மாபெரும் சக்தியாக உருமாறி, அதன் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளலாம் என்று திட்டம் தீட்டியுள்ளதாக பலரும் கூறுகின்றனர்.
இந்நிலையில், பாஜகவிற்கு தமிழகத்தில் பலம் இல்லையென்பதால், அதற்கு அதிக சீட்டுகள் ஒதுக்க முடியாது என்பது போன்ற கருத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பாஜக 60 தொகுதிகள் கேட்பதாக பரவும் தகவல் குறித்து அவரிடம் கேட்ட போது, தேர்தலுக்கு இன்னும் நாளிருக்கிறது. அந்ததந்த கட்சியின் பலத்துக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்படும். இது குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து பாஜகவிற்கு குறைந்த தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.