ADMK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நிலை கட்சிகளைத்தும் தங்களது கூட்டணிகளை ஜனவரியில் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளன. இந்நிலையிலும் 2021 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக இந்த முறை அதனை கைப்பற்ற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக பாஜக உடன் கூட்டணி அமைத்த அதிமுக, அடுத்ததாக தவெகவை கட்சியில் சேர்க்க முயற்சித்தது. ஆனால் விஜய் முதல்வர் வேட்பாளர் பதவியிலிருந்து இறங்கி வராததால், இந்த கூட்டணி கிடப்பிலேயே உள்ளது.
இவ்வாறான நிலையில் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. 4 அணிகளாக பிரிந்துள்ள அதிமுக ஒன்றுபட்டால் தான் தேர்தல் வெற்றி பெற முடியும்மென்பது அதிமுக தொண்டனுக்கு கூட புரிகிறது. ஆனால் இபிஎஸ் அதனை ஏற்க மறுக்கிறார் என பலரும் கூறுகின்றனர். முதலில் ஓபிஎஸ், தினகரன், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ் இறுதியில் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனையும் நீக்கினார். செங்கோட்டையன் தவெகவில் இணைய, இவர்கள் மூவரின் நிலைமை என்னவென்று தெரியாமல் இருக்கிறது.
இந்த சமயத்தில் தான் டிசம்பர் 15 க்குள் நல்ல முடிவை எடுக்க வேண்டுமென கூறிய ஓபிஎஸ், டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பின், தனது முடிவை ஒத்தி வைத்தார். NDA கூட்டணியிலிருந்து விலகிய தினகரன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் வரை பாஜகவில் சேர முடியாது என்று திட்டவட்டமாக கூறி வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் அதிமுகவில் இணைவர்களா என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழ, இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்ட போது, எல்லா கேள்விகளுக்கு, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று என்று கூறி முடித்தார். இவரின் இந்த பதில், ஒபிஸ்யும், தினகரனும் கூடிய விரைவில் அதிமுகவில் சேர்க்கப்படுவார்கள் என்பதை நிரூபித்திருக்கிறது.