PMK: சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கையில், பாமகவில் தந்தைக்கும் மகனும் உண்டான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இளைஞரணி பதவியை யாருக்கு வழங்குவது என்பதில் ஆரம்பித்த சிக்கல் தற்போது வரை தொடர்கிறது. இதனை தொடர்ந்து அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கிய ராமதாஸ் இந்த பிரச்சனையை மேலும் வலுப்படுத்தினார். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.
கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் கூற, இதனை ஏற்காத ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது. தேர்தல் சமயத்தில் பாமக இரண்டாக பிளவுபட்டிருப்பதால் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை எழும் என்பதால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுவதாக நீதிமன்றம் கூறியது. இவ்வாறு மோதல் வெடித்து கொண்டே சொல்லும் நிலையில், பாமகவின் கூட்டணியும் கிடப்பிலிலேயே உள்ளது.
இந்நிலையில், பாமக கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் தனக்கு உள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அன்புமணி என் பெயரை சொல்லி, என் புகைப்படத்தை போட்டு, பாமகவின் கொடியை பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது என்று கூறிய அவர், கூட்டணி குறித்து பேசுவதற்கு நிர்வாக குழு எனக்கு அதிகாரம் கொடுத்துள்ளது. இதன் பின் செயற்குழு, பொதுக்குழு அதிகாரம் கொடுக்க வேண்டும்.
பாமகவின் பொதுக்குழு டிசம்பர் 29 சேலத்தில் நடைபெறும், அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பொதுக்குழுவில் பாமகவின் கூட்டணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூட்டணிக்கான அதிகாரம் ராமதாஸிடம் உள்ளது என்று அவர் கூறியதால், அன்புமணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.