ADMK: இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் பட்சத்தில், தமிழக அரசியல் அரங்கு பரபரப்புடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் தொடரும் பிரிவுகள் அதன் தனி பெரும்பான்மையை இழக்க செய்கிறது. அந்த வரிசையில் அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதிலிருந்தே சசிகலா, ஓபிஎஸ், தினகரன், அண்மையில் செங்கோட்டையன் என பலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என தினகரன் கூறி வருகிறார்.
இவர்களை தொடர்ந்து டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஓபிஎஸ், இபிஎஸ்யை எச்சரித்திருந்தார். இதனால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நினைத்த சமயத்தில், ஒருங்கிணைப்பு பற்றி இபிஎஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது அதற்கு சாத்தியமில்லை என்பதை உணர்த்தியது. இதன் அடுத்த கட்டமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய ஓபிஎஸ் அவரது கெடுவை டிசம்பர் 25 ஆம் தேதி ஒதுக்கி வைத்தார்.
மேலும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற தனது அமைப்பது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்று மாற்றி அதிருப்தியை ஏற்படுத்தினார். இது இவரின் புதிய கட்சியின் பெயர் என்று விவாதங்கள் பரப்பபட்டது. இவ்வாறு ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொடர்ந்து விவாதிக்கபட்ட சமயத்தில், இவரின் ஒரு கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது என்றே சொல்லலாம். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்த பிறகு என்னிடம் பேசவே இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று அவர் கூறியது பாஜக, திமுக, தவெக என அனைவருக்கும் அவர் நடுநிலையாக இருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று விவாதிக்கப்பட்ட நிலையில், இவர் இந்த மூன்றில் ஏதேனும் ஒரு கட்சியில் சேர்வதற்காக தீவிர ஆலோசனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இதன் காரணமாக தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த கட்சிக்கும் எதிராக கருத்து சொல்ல அவர் யோசிக்கிறார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.