TVK ADMK: 2026 தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வரும் வேளையில், மக்களை சந்திக்கும் பணி, கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு என அனைத்தும் வேகமெடுத்துள்ளன. அந்த வரிசையில் கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் இன்று ஈரோட்டில் மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. 84 வகையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்ட நிலையில் இவை அத்தனையும், முறையாக கடைபிடிக்கபட்டுள்ளது என்றே சொல்லலாம்.
இந்த மக்கள் சந்திப்பில் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை விஜய் சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலரும் இணைவார்கள் என்று எதிர்பார்த்த சமயத்தில் அது ஏமாற்றத்திலேயே முடிந்தது. இதனை தொடர்ந்து, தவெக திமுகவை நேரடியாக எதிர்கிறது, ஆனால் அதிமுகவை மறைமுக எதிரியாக வைத்திருக்கிறது என்று விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. அவை அனைத்தும் தற்போது முறியடிக்கபட்டுள்ளது. வழக்கம் போல திமுகவை வசைபாடிய விஜய், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளை கோடிட்டு காட்டினார்.
மேலும் தற்சமயம், களத்தில் உள்ளவர்களை மட்டும் தான் எதிர்ப்போம். மற்றவர்களை எதிர்க்க நேரமில்லை. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்று விஜய் கூறியது பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் தவெகவின் எதிரி யாரென்று மக்களுக்கு தெரிந்தால் போதும் என்று அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இதனால், விஜய் அதிமுகவை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பது நிரூபிக்கபட்டுள்ளது.