DMK DVK MDMK: 2026 யில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக கட்சிகளைத்தும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மூன்றாம் நிலை கட்சிகளான பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் அதிமுகவுடன் பாஜக, தமாகா கூட்டணி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக உடன் மதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தொடர்ந்து வருகின்றன.
திமுகவின் கூட்டணி கட்சிகள் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆட்சி பங்கு, அதிக தொகுதிகள் கேட்டு வலியுறுத்தி வருவதால் இந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்னும் நிலையில் உள்ளது. இந்நிலையில் திமுகவின் குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, மீண்டும் திமுகவிலேயே இணைந்தார். இவரது கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்த மல்லை சத்யா, வைகோ உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதன் பிறகு வைகோ மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்த இவர், திராவிட வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கினார். இதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள மல்லை சத்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால், திராவிட வெற்றிக் கழகம் போட்டியிட தயராக உள்ளது.
அதே போல் எங்கள் தாய் கழகமான திமுகவில் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவர் திமுக கூட்டணியில் இணைவதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளார் என்பது தெளிவாகிறது. இதனால் இவர் கூடிய விரைவில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவர் திமுக கூட்டணியில் சேர்ந்தால் மதிமுக திமுக உடன் தொடருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.