ADMK DMK: தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், கட்சி தொண்டர்கள் தொடங்கி தலைவர்கள் வரை அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர். கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் அதிமுகவில் பல்வேறு பூகம்பங்கள் வெடித்து வருகின்றன. அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்து கிடப்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.
அதிமுக-பாஜக கூட்டணியால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகினார்கள். மேலும் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்தார். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். ஆனால் இந்த முறை அதனை முறியடிக்க நான்கு முனை போட்டி நிலவ போகிறது. இவ்வாறான நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுகவை பாராட்டும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை எதிர்த்தால் தான் கட்சியை மக்களிடம் முன்னேற்ற முடியும். அதற்காக தான் விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று சொல்கிறார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு அதிமுகவின் உள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை எதிர்த்தால் தான் வெற்றி பெற முடியும் என்று அவர் கூறியது திமுகவிற்கு ஆதரவான கருத்தாகவே இருக்கிறது. மேலும் செல்லூர் ராஜு திமுகவை உயர்த்தியும், அதிமுகவை தாழ்த்தியும் பேசுகிறார் என்று பலரும் கூறுகின்றனர்.