ADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் அரங்கு விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக உடன் பாஜக, தமாகா போன்ற கட்சிகள் மட்டுமே கூட்டணியில் உள்ளன. திமுக உடன் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் கூட்டணியில் தொடர்கின்றன. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாமல் திணறி வருகிறது. பாஜகவின் இந்துத்துவ வாதத்தை தமிழக மக்கள் ஏற்காததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு இருக்கும் சமயத்தில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைத்ததை அதிமுக அமைச்சர்கள் சிலர் விரும்பவில்லை. அதில் முக்கியமான நபர், அமைச்சர் ஜெயக்குமார் தான். சென்ற சட்டமன்ற தேர்தலில் தான் தோல்வி அடைந்ததற்கு பாஜக தான் காரணம் என்று கூறிய அவர், சில காலமாகவே அதிமுக நிகழ்ச்சிகளை புறக்கணித்தார். இதனால் இவர் அதிமுகவிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைய போகிறார் என்று பலரும் கூறினார்கள். இதனை ஜெயக்குமார் அறவே மறுத்து வந்தார். ஆனால் தற்போது அவர் கூறியுள்ள கருத்து, இவர் அதிமுகவிலிருந்து விலகி ஓபிஎஸ், தினகரனுடன் இணைவதற்கான சாத்திய கூறுகளாகவே பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ், டிடிவி இணைப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்களின் இணைப்பு குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. எங்களை குறித்து கடுமையான விமர்சனங்கள் இல்லாததால் அவர்களை விமர்சிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், அவர்களை இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார் என்று கூறினார். இபிஎஸ் இவர்கள் இருவரையும் கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், அக்கட்சியில் இருக்கும் ஜெயக்குமார் ஓபிஎஸ், தினகரனை விமர்சிக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் காரணமாக ஜெயக்குமார் ஓபிஎஸ், தினகரனுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.