TVK: அடுத்த 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், சிறிய கட்சிகள் என அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர். வெற்றி வாய்ப்புள்ள கட்சியில் இணைவதற்கு சிறிய கட்சிகள் திட்டம் தீட்டி வரும் வேளையில், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்க திராவிட கட்சிகளும் முயன்று வருகின்றன. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. இ
வ்வாறான நிலையில் தான் நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இவர் கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் இக்கட்சி தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் அண்மையில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்து, தற்போது தவெக நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் பதவியை வகித்து வருகிறார்.
மாற்று கட்சியிலிருந்து வந்தவருக்கு இவ்வளவு பெரிய பதவி வழங்கியது தவெகவினுல் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓபிஎஸ், தினகரன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வரும் வேளையில் இவர்கள் இருவருக்கும் முக்கிய பதவிகளை வழங்குவதற்கான ஆலோசனையில் விஜய் ஈடுபட்டுள்ளாராம். ஏற்கனவே செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட பதவியில் பலருக்கும் விருப்பம் இல்லையென்று கூறப்பட்ட நிலையில் தற்போது, ஓபிஎஸ், தினகரனுக்கு முக்கிய பதவிகள் வழங்குவது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.