TVK BJP: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கிய போதே பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் கூறிவிட்டார். இதனால் திமுக விஜய்யை நேரடியாக விமர்சிக்க தயங்கும் பட்சத்தில், பாஜக அவரை எதிரியாக பார்ப்பதே இல்லை.
தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக, விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்டு அவர் தம்மை கொள்கை எதிரி என்று கூறினாலும் பரவாயில்லை என அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. ஆனாலும் பாஜக உடன் கூட்டணி இல்லையென்பதில் விஜய் உறுதியாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக தவெக ஒரு கட்சியே இல்லையென்றும், விஜய் அரசியல் தலைவர் என்ற பதவிக்கு தகுதி இல்லை என்றும் கடுமையாக விமர்சித்து வந்தது. இவ்வாறான நிலையில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி ராமலிங்கம் ஒரு கருத்தை கூறியுள்ளார்.
தவெக கூட்டணி இன்னும் உறுதியாகாத பட்சத்தில், தவெக உடன் கூட்டணி அமைத்தால் புதிய ஆட்சியை அமைக்கலாம் என்று காங்கிரஸ் திட்டம் தீட்டுகிறது என்று அவர் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். விஜய் பாஜக கூட்டணிக்கு மறுப்பு தெரிவித்ததுடன், அவர்களை கடுமையாக விமர்சித்து வரும் சமயத்தில், தவெக உடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சி அமைக்கலாம் என்று இவர் கூறிய கருத்து பாஜக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.