Breaking News

லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே.. டிடிவி தினகரனின் நெக்ஸ்ட் மூவ்!! விஜய்க்கு நெருங்கும் சிக்கல்!!

The list is very long.. TTV Dhinakaran's next move!! Trouble approaching for Vijay!!

AMMK TVK: அதிமுகவின் முக்கிய முகமாக திகழ்ந்த டிடிவி தினகரன், ஜெயலலிதா இறந்த பின் எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இதனால் இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்னும் கட்சியை தொடங்கிய தினகரன் NDA கூட்டணியில் இணைந்தார். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக-அதிமுக இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனை கவனத்தில் கொள்ளாமல் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தது.

அதிமுக பாஜக உடன் இணைந்த உடன் அக்கட்சியில் தங்களுக்கு மதிப்பு இல்லையென்றும், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும் கூறி டிடிவி தினகரன் கூட்டணியிலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து இவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்ததால், கூடிய விரைவில் அமமுக-தவெக கூட்டணி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சமயத்தில் தான் ஆண்டிப்பட்டி தொகுதியை யார் தங்களுக்கு ஒதுக்குகிறார்களோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி என்று தினகரன் கூறியிருந்தார். இந்நிலையில் தினகரன் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆண்டிப்பட்டி தொகுதியை தொடர்ந்து, முசிறி தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் போட்டியிடுவார் என்று கூறியுள்ளார். அமமுக கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் தினகரன் வேட்பாளர்களை அறிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமமுக-தவெக கூட்டணிக்கு வந்து விடும் என்று நினைத்திருந்த விஜய்க்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அமமுக- தவெக கூட்டணி அமையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.