DMK MDMK: இன்னும் 4, 5 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் களமும், மாநில கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. கூட்டணி குறித்த பேச்சுகள் தற்போது அதிக வேகமேடுத்துள்ள நிலையில், திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்துள்ளது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள் திமுகவை வீழ்ச்சியை நோக்கி தள்ளுகின்றன.
அந்த வகையில் காங்கிரஸ் பல ஆண்டு காலமாக திமுக உடன் இணைந்து தேர்தலை சந்தித்து வரும் சூழலில், விஜய்யின் வருகையால் ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை வலியுறுத்தி வருகிறது. காங்கிரசை தொடர்ந்து விசிகவும் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு வருகிறது. திமுக தலைமையில் ஒரு குழு அமைத்த உடன் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும் என்று ஸ்டாலின் அறிவித்த நிலையில், மதிமுகவை சேர்ந்த துரை வைகோ ஒரு கருத்தை கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், திமுக உடன் 9 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளோம். மதிமுக எத்தனை சீட்டுகளில் போட்டியிடும் என்பதை தலைமை முடிவு செய்யும். உரிய எண்ணிக்கையிலான சீட்டை திமுக எங்களுக்கு வழங்கும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து இந்த தேர்தலில் மதிமுக அதிக தொகுதிகளை கேட்கும் என்பதை உறுதி செய்துள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக கூட்டணியில் பல்வேறு விரிசல்கள் ஏற்படுவது தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.