திடீர் திருப்பம்.. திமுக உடன் பாமக கூட்டணி.. ட்விஸ்ட் வைத்து பேசிய ராமதாஸ்..

PMK DMK BJP: இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தொடங்கி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக இந்த முறையும் ஆட்சி கட்டிலை தன்வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. மேலும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் இதில் வெற்றி பெற போராடி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளனைத்தும் வெற்றி கூட்டணியில் இடம் பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இவ்வாறான சமயத்தில் தான் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. இந்த பிரிவினை தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலர் கூறியும் அன்புமணியும், ராமதாசும் ஒன்று சேர தயாராக இல்லை. இவ்வாறு இரண்டாக பிரிந்துள்ள பாமகவின் ஒரு பகுதியான அன்புமணி தரப்பு, சில தினங்களுக்கு முன்பு அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்து விட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் முழு அதிகாரமும் எனக்கு மட்டுமே உள்ளது. அன்புமணியின் செயல் சட்டவிரோதமானது.

இதனால் அன்புமணியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸிடம் திமுக உடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று கேட்ட போது, யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. திமுக உடன் கூட்டணி அமையலாம், அமையாமலும் போகலாம் என்று கூறிய அவர், தற்போது வரை NDA கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.