காங்கிரசுக்கும் ஆட்சியில் பங்கு.. மௌனம் கலைத்த செல்வப்பெருந்தகை.. சுக்குநூறாகும் திமுக கூட்டணி..

DMK CONGRESS: அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக ஆளுங்கட்சியான திமுக ஏகப்பட்ட முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ திமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு விசியங்களை செய்து வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் வேளையில். தற்போது ஆட்சி பங்கு குறித்த கேள்விக்கு மௌனம் சாதித்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விஜய் தமிழக அரசியலில் கால் பதித்ததிலிருந்தே காங்கிரஸ் கட்சி திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. அந்த வரிசையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் போன்றோர் ஆட்சியில் பங்கு தராவிட்டால் வேறு மாதிரியான முடிவுகளை எடுப்போம் என்று ஸ்டாலினை எச்சரித்திருந்தனர். இவர்களை தொடர்ந்து விசிகவும் இந்த நிபந்தனையை முன் வைத்து வந்தது திமுக தலைமைக்கு பேரிடியாக இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைச்சர் பெரியசாமி ஆட்சியில் பங்கு கிடையாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார் என்று காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்தார்.

இவரை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இது குறித்து கேட்ட போது, அவர் பதிலளிக்காமல் சென்றது, அவரும் ஆட்சி பங்கை எதிர்பார்க்கிறார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இத்தனை நாட்களாக முழுக்க முழுக்க திமுகவிற்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கட்சியிலிருப்பவர்கள் ஆட்சி பங்கை கேட்டால் அவர்களை கண்டித்தும் வந்த செல்வப்பெருந்தகை, தற்போது மௌனமாக சென்றது கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் கூடிய விரைவில் செல்வப்பெருந்தகையும் ஆட்சி பங்கு குறித்து நேரடியாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.