DMK KMDK: மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் அதற்கான வேளைகள் நடந்து வருகின்றன. திராவிட கட்சிகள், மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வரும் நிலையில், சிறிய கட்சிகளனைத்தும் வெற்றி வாய்ப்புள்ள கட்சியில் சேர முயற்சித்து வருகின்றன. மேலும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எப்போதும் போலில்லாமல் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக-திமுகவின் போட்டியை மட்டுமே பார்த்து கொண்டிருந்த தேர்தல் களம் தற்போது நாதக-தவெகவின் போட்டியையும் எதிர்நோக்கியுள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக, 2026 தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில், முதலில் கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வரும் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் ஆட்சி பங்கை வலியுறுத்தி வருவது திமுக தலைமைக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் திமுக உடன் பல ஆண்டுகளாகவே கூட்டணியில் உள்ள நிலையில், அது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
ஆனால் இவை இரண்டும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவ்வாறான நிபந்தனைகளை முன்வைத்து வருவது அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் திமுகவிற்கு இன்ப அதிர்ச்சியாக இருக்குமென்று பலரும் கூறுகின்றனர். திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கொங்கு மக்கள் தேசிய கட்சி அக்கூட்டணியிலேயே தொடரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர் கூறிய இந்த செய்தி திமுக தலைமைக்கு பக்க பலமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.