BJP NTK: 2026 க்கான சட்டசபை தேர்தல் அடுத்த இரண்டு மாதங்களில் நடைபெற இருப்பதால் அதற்கான தேர்தல் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி கணக்குகளை வகுத்து வரும் வேளையில் நாதக மட்டும் ஒவ்வொரு முறையும் தனித்து நின்று ஆட்சியை பிடிப்பேன் என்று கூறி வருகிறது. தமிழகத்தில் ஓரளவு வாக்குகளை வைத்துள்ள நாதக இம்முறையும் அதே போல் தனித்து நின்று களம் காணப் போகிறது. நாதகவின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிமுக, திமுக, பாஜக என அனைத்து கட்சிகளையும் எதிரியாக நினைத்து வருகிறது.
அனைத்து கட்சிகளையும் எதிரி என்று கூறி வரும் சீமான் தனித்து நின்று ஓரளவு வாக்குகளை சேகரித்துள்ளார். இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, 2026 தேர்தல் நான்கு முனை போட்டியை சந்திக்க உள்ளது, சீமானை யாரும் லேசாக எடைபோட வேண்டாம். அவர் அவரது கொள்கைக்காக நிற்கிறார். அவரது கொள்கை எனக்கு புடிக்குமோ பிடிக்காதோ அது இரண்டாம் பட்சம், ஆனால் அவர் அவரது கொள்கையில் உறுதியாக உள்ளார் என்று கூறியுள்ளார்.
பாஜகவை சீமான் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் அண்ணாமலை அவருக்கு ஆதரவாக பேசி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால் பாஜக சீமானை, கூட்டணியில் சேர்க்க முயற்சிகிறது என்பது தெளிவாகியுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் 2026 தேர்தல் போட்டி வாய்ந்ததாக உள்ளதால் சீமான் பாஜகவில் இணைவார் என்று பலரும் கூறி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அண்ணாமலையின் இந்த கருத்து பாஜக மற்றும் நாதக வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.