ADMK AMMK: எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய போவதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவில் பல்வேறு பிரிவினைகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற ஆரம்பத்திலேயே கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோரை கட்சியிலிருந்து நீக்கினார். இதன் பின்னர் டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை அமைத்தார். சசிகலா அரசியலிலிருந்து விலகி இருந்தார்.
இவ்வாறான நிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாஜக இவர்களை ஒருங்கிணைக்க முயற்சித்தும் அந்த முயற்சி கை கூடவில்லை. இந்நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி கூட்டணியிலிருந்து விலகினார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி ஓபிஎஸ்யை மட்டும் கூட்டணியில் சேர்க்க சம்மதம் தெரிவித்து விட்டதாக பலரும் கூறுகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம், ஓபிஎஸ் எந்த ஒரு இடத்திலும் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறவில்லை. மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தி வந்தார். இதன் காரணமாக எடப்பாடி, ஓபிஎஸ்க்கு சில தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் எக்காரணம் கொண்டும் என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்காத டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க முடியாது என்பதில் எடப்பாடி தெளிவாக உள்ளாராம்.