ஆடி மாதத்தில் தேங்காய் சுடுவதற்கான காரணம் மற்றும் சுடும் முறை?

0
156

பொதுவகவே அடிமாதம் என்பது தெய்வத்திற்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. பூமியை போலவே தேவலோகத்திலும் இரவுபகல் உண்டு. அப்படி தேவர்களும் கடவுளை வழங்கும் காலம் இந்த ஆடி மாதம் ஆகும்.

அதுமட்டுமன்றி திருமண தம்பதிகளுக்கு ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் தலையாடி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாகும்.பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு பலவகை உணவுகள் செய்து விருந்தோம்பல் இட்டு அவர் அவர் வசதிக்கு ஏற்ப மாப்பிள்ளைக்கு சீர் செய்வர்.

இதுமட்டுமன்றி ஆடி முதல் நாள் தேங்காய் சூடுவர்,மகாபாரத போரின் தொடக்கத்தில் உயிர்பலி கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது அப்பொழுது ஒரு அரவாண் இனத்தை சேர்ந்த ஒருவரை பலிகொடுத்தனர்.அவரைப் போற்றும் விதமாக ஆடி முதல் நாளன்று தமிழ்நாட்டில் தேங்காய் சுடும் வழக்கம் வந்தது.

அதிலும் இந்த சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் அதவது காவேரி வைகை ஆற்றுப்பகுதியில் ஆடி முதல் நாள் தொடக்கத்தில் தேங்காய் சூட்டு அரவானை போற்றி இன்று முதல் 18 நாட்களுக்கு தெய்வ வழிபாடு செய்து ஆடி18 அன்று ஆடி பெருக்காக கொண்டாடுவர். ஆடிப்பெருக்கன்று காவிரி அல்லது வைகை ஆற்றுப்பகுதியில் தலைமுழுகி கடவுளைப் பிரார்த்திப்பர்.இதன் காரணங்களை பற்றி நாம் மற்றொரு பதிவில் காணலாம்.

தேங்காய் சுடும் முறை:

இளம் தேங்காயை அதாவது இளநீர் ஆகவும் இல்லாமல் நன்றாக முற்றிய தேங்காய் இல்லாமல் நடுநிலையில் இருக்கும் தேங்காயை எடுத்து அதனை சுற்றிலும் சுத்தம் செய்து மேல்பகுதியில் துளையிட்டு முக்கால்வாசி தண்ணீரை எடுத்துவிட்டு கால்வாசி தண்ணீரில் சர்க்கரை,அல்லது வெல்லம் அவுல்,ஏலக்காய்,பாசிப்பருப்பு போன்றவற்றை தேங்காயினுள் போட்டு தேங்காயின் வெளிப்பகுதியில் மஞ்சள் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் இதனை எந்த குச்சியில் வேண்டுமானாலும் சுட்டு விடக்கூடாது.அழிஞ்ஜன் (அழிஞ்ச மரம்) என்னும் வகை மரத்தின் குச்சியை வெட்டி அதன் மேல் தோலை அகற்றிவிட்டு மஞ்சள் தடவி தேங்கயினுள் புகும் அளவிற்கு அதன் ஒரு பகுதியை கூர்மை செய்து தேங்கயின் உடன் சொருகி பின்பு அதனை தீயில் சுடவேண்டும்.

பின்பு சுட்ட தேங்காயை வீட்டின் பூஜை அறையிலோ அல்லது கோவிலிலோ நிமிர்த்து வைத்து தீபாரதனைக் காட்டி பின்பு அந்த தேங்காயை உடைத்து சிறதளவு தெய்வதிற்கு வைத்து பூஜை செய்தப்பின் அதனை நாம் உண்ண வேண்டும்.

Previous articleஇந்த மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிப்பார்! கராத்தே தியாகராஜன் திடீர் தகவல்.!!
Next articleநடிகர் அர்ஜுனின் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோகம்