மதுபாட்டில்கள் உடைப்பு :கண்ணீர் விட்ட குடிமகன்கள்

0
120

ஊரடங்கு காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து, தொழில் போன்றவற்றை பதித்து வரும் நிலையில் குடிமக்களும் பதித்து வந்தனர். கொரோனா அதிகமாக காணப்படும் சென்னை போன்ற பல நகரங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனால் குடிமகன்கள் மிகுந்த சிரமத்திற்கு அழகி வருகின்றனர்.

இதை காரணம் கொண்டு சில வெளியூர்களில் இருந்து வரும் மதுப்பாட்டில்களின் வாங்கி வருகின்றனர். பலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பாக்ஸ் பாக்ஸ்களாக மதுப்பாட்டில்களை வங்கி வருகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் முயன்றனர்.

அந்த வகையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்ட போலீசார் மற்றும் 10 காவல்நிலையங்கள் சேர்ந்து 14,189 மதுபாட்டிகளை பறிமுதல் செய்து வைத்திருந்தன.இதன் மதிப்பு 72 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அந்த மதுப்பாட்டில்களை குடிமக்களின் முன்பே அழிக்க மாவட்ட காவல்துறை முடிவு செய்தது.

அதன்படி அந்த மதுப்பாட்டில்களை ஒரே இடத்தில் அடுக்கி அதன் மீது ரோடு ரோலரை விட்டு சில்லுசில்லாக்கினர்.

தீவிபத்து ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,தீ அனைப்பு துறையினரும் உடன் இருந்தனர்.

14ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டிகள் உடைவதை பார்க்க பலர் அங்கு கூடியிருந்தனர்.
இதனை கண்ட குடிமகன்கள் மது பாட்டில் உடைவதை கண்டு அழுதுக்கொண்டே வேடிக்கை பார்த்தனர்.இந்த சம்பவத்தின் போது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Previous articleகழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி இருவர் பலி:முதல்வர் இரங்கல்?
Next articleவன்முறையில் ஈடுபடுபவர்களை தே.பா சட்டத்தில் கைது செய்யுங்கள்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்