பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு தேர்வை மீண்டும் எழுத தேதி அறிவிப்பு?

0
78

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 10 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க இருந்த நிலையில் ,கொரோனா நோய் தொற்று காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக முடிக்காமல் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் நோய்த்தொற்று காரணமாக பொதுத் தேர்வு நடத்தாமல் வகுப்பு வருகை சதவீதமும் மற்றும் காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது.

கொரனோ நோய்த்தொற்றின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடத்தை சார்ந்தவர் அவர்களது பொதுத் தேர்வுகளை எழுத முடியாமல் போனது.இதனைக் கருத்தில் கொண்ட பள்ளிக்கல்வித்துறை தேர்வுகள் எழுத முடியாமல் விடுபட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அனுமதித்து.இந்தத் தேர்வின் தேதி தற்போது அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிவிட்டு தாசப்பகவுண்டன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்ணினிகளை வழங்கினார்.

பின் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு இம்மாதம் 27ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்றும்,வரும் 30ம் தேதியே முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
தற்காலிகமாக உரிமம்பெற்ற 2000 தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளிக் கட்டமைப்பு மற்றும் வாகன வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.