பொதுவாகவே திருமணமான பெண்கள் தனது வீட்டின் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள அதிகம் கவனம் செலுத்துவர்.எப்போதும் அதனை சுத்தமாக வைத்திருக்க நினைப்பர் அப்பொழுதுதான் அவர்களின் வீட்டில் அன்னலட்சுமி நினைத்திருப்பாள்.
உண்மையில் அன்னலட்சுமி நமது வீட்டில் நிலைத்திருக்க சுத்தமாக வைப்பது மட்டுமின்றி சில பொருட்களையும் குறையாமல் வைத்திருக்க வேண்டும் அவை என்னென்ன பொருட்கள் என்பதனை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நமது சமையலறையிலேயே நம் கண்முன்னே படுமாறு அன்னலட்சுமியின் உருவ போட்டோ ஒன்றினை மாற்றி வைக்க வேண்டும்.அசைவம் சமைக்கும் நாளன்று மட்டும் அன்னலட்சுமி போட்டோவை பூஜை அறையில் எடுத்து வைத்து விட்டு மறுநாள் வீட்டை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் சமையலறையில் எடுத்து வைத்து விட வேண்டும்.தினமும் நாம் காலையில் சமைக்கும் போது அன்ன லட்சுமியை மனதார வேண்டி பின்பு சமைக்க வேண்டும்.
நமது சமையலறையில் மஞ்சள் தூள் அல்லது மஞ்சள் சுத்தமாக குறைய விடக்கூடாது.எப்பொழுதுமே
மங்களகரத்தின் உருவமான மஞ்சள் நிறைந்து இருக்க வேண்டும்.
நமது சமையலறையில் உப்பை எப்பொழுதும் குறைய விட்டு விடவே கூடாது.ஒரு சில வீடுகளில் உப்பை சுரண்டி எடுப்பர் அந்த அளவுக்கு உப்பு குறையும் வரை விட்டுவிடக் கூடாது ஏனெனில் உப்பானது அன்னலட்சுமியின் மறு உருவம் ஆகும்.
வீட்டில் எப்பொழுதும் ஒரு குடமாவது நிறைகுடம் தண்ணி வைத்திருக்க வேண்டும்.