தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு:!சென்னை வானிலை மையம் அறிவிப்பு

0
132

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வைப்பு என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.இதனையடுத்து கடலோரமாவட்டங்களுக்கு மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களன புதுவை ,காரைக்கால் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது’.

தமிழகத்தில் உள்மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் , நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்ய கூடும் என்றும் வெப்பத்தை பொருத்தமட்டில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்..

இதுவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் ஜூலை 29 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் , சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கூடும் என்பதால் தென்மேற்கு வங்கக்கடல் குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு ஜூலை 28ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் , தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிக்கு ஜூலை 29, 30 தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம்  மீனவர்களுக்கு எச்சரித்துள்ளது.

Previous articleவங்கிகளை தனியார்மயமாக்காமல் இப்படியும் செய்யலாம்:!ஆர்பிஐ இலிருந்து சதீஷ் மராத்தே அவர்களின் கருத்து
Next articleநிலஉரிமையாளர்களுக்குப் பேரதிர்ச்சி! புலம் நில அளவை மற்றும் வரை படங்களுக்கான அளவீட்டுக் கட்டணம் 66 மடங்கு உயர்வு!