பெண்கள் இந்த ஆறு விஷயங்களைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும்!!!

Photo of author

By Pavithra

பெண்கள் இந்த ஆறு விஷயங்களைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும்!!

குடும்பத்தில் சந்தோஷம் ஆகட்டும் மற்ற எந்த விஷயங்கள் ஆகட்டும் அந்த குடும்ப பெண்ணினை பொருத்தே அமைகிறது.குடும்பத்தின் தலைவி மகிழ்ச்சியாக இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பர்.ஒரு குடும்பத்தின் ஆணிவேராக திகழ்பவர் ஒரு பெண் ஆவாள்.ஆணிவேராக திகழும் குடும்பப்பெண்கள் தனது குடும்பத்தில் சந்தோஷம் நிலவ இந்த ஆறு விஷயங்களை கடைபிடித்தாலே போதும்.

அந்த ஆறு விஷயங்கள்:

பெண்கள் காலை எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.ஐயோ பொழுது விடிந்து விட்டதே என்று சோம்பேறி தனத்துடன் எழுந்தாள் அன்று நாள் முழுவதும் வேலையும் சோம்பேறித்தனமாக நடக்கும்.ஒரு பெண் தனது குடும்பத்தில் சோம்பேறித்தனமாக வேலையை செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுவர்.

குடும்பப் பெண்ணாக இருப்பவர்கள் காலை எழுந்தவுடன் நீராடி நல்ல உடையை அணிய வேண்டும்.ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவர்.நாம் அணியும் உடையே நமது பொறுப்புகளை நமக்கு எடுத்துரைக்கும்.

குடும்பத் தலைவிகள் எப்பொழுதும் நல்ல வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்.குடும்பத்திலுள்ளவர்களை அவச் சொல் சொல்லி பேசி விடக்கூடாது.ஏனெனில் ஒரு பெண்ணின் வார்த்தை அப்படியே பளிக்க கூடிய சக்தி மிகுந்தவை ஆகும்.

குடும்ப பெண்கள் காலை மாலை என இரண்டு வேளையும் தீபமேற்றி இறை வழிபாடு செய்ய வேண்டும்.தீபமேற்றினால் பெண்ணிற்கு மன அமைதி ஏற்பட்டு குடும்பத்திலும் மன அமைதி நிலவும்.

பெண்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.சிரித்த முகத்தோடு இருக்கும் பெண்களின் குடும்பத்தில் மகாலட்சுமி தானாகவே குடிபுகுந்து விடுவாள்.

பெண்கள் எப்பொழுதும் அமைதியான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.குடும்பத்தின் ஆணிவேராக திகழும் பெண்ணானவள் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய சக்தி பெற்றவள் ஆவாள்.எனவே குடும்பப் பெண்கள் நேர்மையோடும் அமைதியாகவும் பேசி ஒரு பிரச்சினையை சரி செய்ய பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.