30,000 கோடி வரை எடுக்கப்பட்ட PF பணம் ! புலம்பும் அதிகாரிகள்!

0
70

கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி போட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் பணம் இல்லாமல் வீட்டின் பயன்பாட்டிற்கு போதிய இருப்பு இல்லாமல் தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கே மாதங்களில் 8 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தங்களது PF கணக்கில் இருந்து 30,000 கோடி வரையிலான பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். மக்களின் இந்த செயல் இந்த நிதியாண்டின் நிதி வருவாயை பெருமளவில் பாதிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. திடீர் வேலை இழப்பு, சம்பள தட்டுபாடு, மருத்துவ செலவுகள்,வீட்டு செலவுகள் என கொரோனாவை காரணம் காட்டி 3 மில்லியன் பேர் ரூ.8,000 கோடிப்பணத்தை

திரும்ப பெற்றுள்ளனர். மீதம் ரூ.22 ஆயிரம் கோடியை 5 மில்லியன் பொது சந்தாதாரர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.

இதனால் இந்த ஆண்டு வருவாயில் ஏற்படும் நிதியிழப்பு பின்னர்தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தியபோதே மருத்துவ செலவுக்காக EPFO லிருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளலாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.