கடந்த ஜூலை 25 ஆம் தேதி விசாலுக்கும் அவரது தந்தைக்கும் காரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில் அவர்கள் கொரோன உறுதி செய்யப்பட்டு ஆயுர்வேத மருந்தை உட்கொண்டு நான்கு நாட்களில் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது.
இந்தச் செய்தியை விஷால் டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
விஷால் கூறியதாவது,
” எல்லோரும் நலமுடன் வாழ வேண்டுமென இந்த வீடியோவை வெளியிடுகிறேன்”.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி எங்களை பாதுகாத்து கொண்டோம் என கூறுகிறேன்.
இது கட்டாயம் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இதை சொல்வதில் எந்த தவறுமில்லை என உணர்கிறேன்.
என்னுடைய அப்பாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது ஆனால் நான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. அதனால் மருத்துவமனைக்கு எதிரானவன் அல்ல.
அவரை பக்கத்தில் இருந்து நானே பார்த்து கொண்டதால் எனக்கும் எனது மேலாளர் ஹரிக்கும் சளி காய்ச்சல் ,இருமல் பிரச்சினை ஏற்பட்டது.
பரிசோதனைக்கு பிறகு கொரோனா உறுதியானது.
நாங்கள் ஆயுர்வேதம், ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொண்டோம். 4 நாட்களில் காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் குறைந்தன. 7 நாட்களில் முழுமையாக குணமடைந்தோம்.
ஆயுர்வேத மருந்தை விற்பதற்காக இதை நான் சொல்லவில்லை. எங்களை எது காப்பாற்றியது என்பதை சொல்ல வேண்டும் என்பதற்காக இதை பகிர்கிறேன். கரோனா தொற்று ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் உங்களுக்கு முதல் மாத்திரை பயம் தான், அதனால் யாரும் பயப்படாதீர்கள். பயம் தான் நிறைய பேரை இக்கட்டான சூழலுக்கு கொண்டு போய்விடும்
கரோனாவை எதிர்த்து போராடுவேன் என்ற மன தைரியத்துடன் இருக்க வேண்டும். எனக்கும் அப்பாவுக்கும் அந்த மன தைரியம் இருந்ததால் ஆபத்தில் இருந்து மீண்டும் வந்தோம்.
நாங்கள் மூன்று பேரும் குணமடைந்து திரும்பியுள்ளோம்” என்று பேசியிருந்தார்.