கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
அதற்கான அடிக்கல் நாட்டும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பூமிபூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை கட்டுவதற்கான ஆணையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு 2019 நவம்பர் அன்று ஆணையிட்டது.
அதனைத் தொடர்ந்து கோவில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த மே 11 ஆம் தேதியில் இருந்து இதற்கான நிலத்தை சமன் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோவில் பணிகளை கவனிப்பதற்காக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அமைக்கப்பட்டு அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அதற்கான பணிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்
வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று அயோத்தியில் பிரதமர் மோடி அவர்கள் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
250 பேர் மட்டுமே இவ்விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விழாவில் ராமர் சென்று பார்வையிட்ட புனித நீர் மற்றும் மண் கொண்டு ராமருக்கு பூஜைகள் செய்யப்படும் என ராம ஜென்மபூமி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ராஜஸ்தானின் எம்பியான ஜாஸ்கவுர் மீனா ராமர் கோவிலை கட்டும்பொழுது கொரோனா வின் அழிவு ஆரம்பமாகும் என கூறுகிறார் மற்றும் அவர் கூறியதாவது கடவுளின் மீது எங்களுக்கு அதீத நம்பிக்கை உள்ளது ராமர் கோவிலை கட்டும் போது இந்த நாட்டை உலுக்கி வரும் கொரோனா வின் முடிவு நிச்சயம் ஆரம்பமாகும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே சர்மா அவர்களும் இதைப் பற்றி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.