நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் சுய உதவிக் குழுவினர் வலியுறுத்தல்?

0
134

நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் சுய உதவிக் குழுவினர் வலியுறுத்தல்

கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் வாழ்வாதாரத்தை இழந்த நடுத்தர குடும்ப மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் வங்கிகள் தங்களிடம் கடன்பெற்ற வாடிக்கையாளர்களிடம் கடன் தவணை மற்றும் வட்டியை கேட்க கூடாது என்றும், அவர்களுக்கு கடனை அல்லது வட்டியை திருப்பி செலுத்த 6 மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடன் தவணையை திருப்பி செலுத்துமாறு பல தனியார் வங்கிகளும்,கூட்டுறவு வங்கிகளும்,பல தனியார் நிதி நிறுவனங்களும் நெருக்கடி தருவதாக புகார் எழுந்துள்ளன.

இதுகுறித்து மகளிர் சுய உதவிக் குழு சார்பில் பேசிய சிலர் கொரோனாவால் வாழ்வதாரமே இழந்துள்ள நிலையில்,வங்கிகளும் பல தனியார் நிறுவனங்களும் கடன் மற்றும் வட்டியை கட்ட நெருக்கடி செய்கின்றனர். இதனால் வேறு ஒரு தனியார் நிறுவனமிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினர். எனவே இந்த நிதி நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து கூட்டுறவு வங்கியின் அதிகாரி ஒருவர் பேசியவாறு அரசு சார்ந்த வங்கியோ அல்லது மகளிர் சுய உதவிக் குழுவை சார்ந்த வங்கியோ மக்கள் தாமாகவே முன்வந்து கடன் தவணையை செலுத்தினால் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும்.தவணையை திருப்பி செலுத்துமாறு ஆறு மாதம் காலங்கள் வரை கட்டாயப்படுத்தக்கூடாது,இதனை மீறும் வங்கிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Previous articleஇப்படி பண்ணிட்டாங்களே? குமுறும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை!
Next articleகொள்ளையடித்த பணத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்கள் கைது!