தொடர்ந்து அராஜகம் செய்யும் விசிகவினர் அமைதி காக்கும் தமிழக அரசியல் கட்சிகள்

0
177

தொடர்ந்து அராஜகம் செய்யும் விசிகவினர் அமைதி காக்கும் தமிழக அரசியல் கட்சிகள்

சமீபத்தில் பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதி பகுதிகளில் நடந்த கலவர பிரச்சனைகள் அடங்கும் முன்பே அடுத்த கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட குச்சிப்பாளையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தலித் இளைஞர்கள் வன்னியர் மக்கள் வாழும் பகுதிக்கு சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தலித் மக்களின் இந்த அராஜகத்தை பற்றி அந்த பகுதி பொது மக்கள் கூறியதாவது

bஇந்த குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள வன்னியர் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் திடீரென ஏற்பட்ட மோதலில் விளைவாக நடத்தப்பட்டது இல்லை என்றும் இந்தத் தாக்குதல் ஏற்கனவே திட்டமிட்டு வன்னியர்கள் மீது நடத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். மேலும் குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அங்குள்ள திடலில் சம்பவம் நடந்த அன்று காலை கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும். அப்போது அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மேல்கவரப்பட்டு காலனியைச் சேர்ந்த லெனின், திவாகர் என்ற இரண்டு தலித் காலனி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குச்சிப்பாளையம் இளைஞர்களிடம் சென்று தகராறு செய்துள்ளததாகவும் அது தலித் மக்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் குச்சிப்பாளையம் இளைஞர்கள் அவர்களிடம் எதுவும் செய்யாமல் விலகி சென்றதாகவும் கூறுகிறார்கள். அப்பகுதியில் தலித்துகள் அதிகம் வசிப்பதால், அவர்கள் அடிக்கடி இது போல தகராறு செய்வது வழக்கம் என்றும் அந்த பகுதி பொது மக்கள் கூறுகின்றனர்.

தாங்கள் திட்டமிட்டது போல நடக்காததால் லெனின், திவாகர் ஆகிய இரண்டு தலித் இளைஞர்களும் ஏற்கனவே வகுக்கப்பட்ட நாடகத்தின்படி குச்சிப்பாளையம் இளைஞர்கள் தங்களைத் தாக்கி விட்டதாக தங்கள் காலனியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி சீத்தாராமன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி ஏற்கனவே கலவரம் ஏற்படுத்த தயாராக இருந்த அவர்கள் சிறிய சரக்குந்தில் அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற கொடிய ஆயுதங்களுடன் குச்சிப்பாளையம் கிராமத்திற்குள் புகுந்து அப்பகுதியில் வாழ்ந்து வந்த வன்னியர் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தலித் காலனி பகுதியை சேர்ந்த விசிக கட்சியினர் நடத்திய இந்த தாக்குதலில் அங்கிருந்த வன்னியர் மக்களின் வீடுகள் மீது கற்களை வீசியும், உருட்டுக் கட்டைகளால் அடித்தும் அவர்களின் சொத்துக்களை சூறையாடியுள்ளனர். மேலும் அந்த விசிக கலவர கும்பல், தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான இரு சக்கர வாகனங்களையும் அடித்து உடைத்துள்ளார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளும், 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்து பண்ருட்டி மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

தாக்குதல் சம்பவம் நடந்த குச்சிப்பாளையம் கிராம பகுதியில் வன்னியர்கள் 350 நபர்கள் மட்டுமே வாழும் நிலையில், அதைச் சுற்றியுள்ள காலனிகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் வாழ்வதாலும், அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறைக்கு தூண்டி விட்டு வருவதாலும் எந்த நேரத்தில் தங்களுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வன்னிய மக்கள் அஞ்சி வாழ்வதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

மேலும் குச்சிப்பாளையம் பகுதியில் வசிக்கும் வன்னிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சாதி வெறியும், அரசியல் பகையுமே முக்கிய காரணம் என்றும், தாக்குதலின் போது அந்த பகுதிக்குள் நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ‘‘ இனி மாம்பழம் சின்னத்தை உங்கள் வீடுகளில் வரைவீர்களா? இனி மாம்பழத்திற்கு வாக்களிப்பீர்களா? என்று அந்த மக்களை மிரட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். வன்னிய சமுதாய மாணவிகள் படிப்பதற்காக பேருந்து ஏறி வெளியூர் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர் என்றும் கூறுகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாமல் இருக்கும் நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மட்டும் இந்த தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது வன்னிய சமுதாய மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கதாகும். இந்நிலை தொடர தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்த வேண்டும். சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடும், காயமடைந்த மக்களுக்கு தரமான சிகிச்சையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள், தூண்டியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொன்பரப்பியில் விடுதலை சிறுத்தைகள் தான் கலவரத்தைத் தூண்டினார்கள். ஆனால், அதற்கு பாமகவும், வன்னியர்களும் தான் காரணம் என்று பொய்யாக குற்றஞ்சாட்டிய திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அவதூறுகளை அள்ளித் தெளித்தனர். வன்னிய மக்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று வெறியூட்டும் பேச்சுக்களை பேசினார்கள். வன்னியர்கள் மீது தங்களுக்கு காழ்ப்புணர்ச்சியும், பகையும் இல்லை என்றால் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும்.

இது போலவே மக்களவை தேர்தலின் போது பொன்பரப்பியில் விசிக கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்ட கலவரத்தில் தலித் மக்களின் வீடுகளை வன்னியர்கள் தாக்கி விட்டதாக விளம்பரத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் பேசி வந்த தமிழக அரசியல் தலைவர்களும்,விசிக மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும்,சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சாதி பிரிவினையை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பவர்களும் வன்னியர் மக்கள் பாதிக்கபட்ட இந்த கலவரத்தை பற்றி பேசுவார்களா? கலவரத்திற்கு காரணமான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தலித் இளைஞர்களை கண்டிப்பார்களா? என்று பல்வேறு கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

Previous articleதோல்வியின் விரக்தியில் ஸ்டாலின் அரசியல் நாகரிகத்தை மறந்து விட்டாரா? மீண்டும் புதிய சர்ச்சை
Next articleதேவராட்டம் சாதி வெறி படமென்றால் இயக்குனர் ரஞ்சித் எடுத்தது எல்லாம் புரட்சி படங்களா?