வல்வில் ஓரி விழாவை நடத்தக்கோரி மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் கோரிக்கை?

0
152

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான எழுவது கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் வருடம் தோறும் ஆடிப்பெருக்கையொட்டி வல்வில் ஓரி திருவிழா மிகப் பிரசித்தியாக நடைபெறும்.

இம்மலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு நாளன்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழா எடுக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படும். அதனை முன்னிட்டு அதிகாரிகளும் பல்வேறு அமைப்பினரும் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிப்பா்.

இதுமட்டுமன்றி இந்த மலையில்
ஆகாய கங்கை அருவி ஒன்று விழுகிறது.அறப்பளீஸ்வரா் கோயில், எட்டுக்கை அம்மன் என்னும் சிறப்புமிக்க கோயில்களும் இங்கு உள்ளன.இந்த அருவியில் குளிக்கவும்,வல்வில் ஓரி திருவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவும் ஆடிப்பெருக்கன்று பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கு திரளுவர்.

மேலும் இங்குள்ள கலையரங்கில் பல்துறை விளக்கக் கண்காட்சிகள், தோட்டக்கலைத் துறையின் மலா்க் கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சமூகநலத் துறை சாா்பில் பெண்கள், சிறுவா்களுக்கான போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிகள் அங்க இரண்டு நாட்களுக்கு தொடா்ச்சியாக,மிக விமர்சியாக நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு தொற்றின் காரணமாக இந்த திருவிழா தடைசெய்யப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு யாரும் வரக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.இதனால் ஆடிப்பெருக்கன்று கொல்லிமலை வெறிச்சோடி காணப்பட்டது,

இது மட்டுமின்றி இங்குள்ள பலா, வாழை, அன்னாசிப் பழங்கள் மிக சுவையாக இருப்பதினால் சுற்றுலாப் பயணிகள் விரும்பி அதிக அளவில் வாங்கிச் செல்வா். வல்வில் ஓரி விழா ரத்துச் செய்யப்பட்டதால் அப்பழங்கள் கடைகளில் விற்பனையின்றிக் காத்திருந்தன.இதனால் வியாபாரிகள் பெரிதும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

பாரம்பரிய விழாவான வல்வில் ஓரி விழாவை கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பிறகு கொல்லிமலை மக்கள் பயனடையும் வகையில் சிறப்பு விழா ஒன்றை மாவட்ட நிா்வாகம் நடத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Previous article#Breaking News மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு !வரலாறு காணாத உச்சம்!
Next articleமுதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த மு.க ஸ்டாலின்!