சேலம் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:?சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

0
116

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் மலைத்தொடர் பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.அவலாஞ்சியில் மட்டும் நேற்று 58 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.அதற்கு முந்திய நாள் 30 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவானது.இந்நிலையில் காலையில் வெளியீட்ட அறிக்கையின்படி நீலகிரி தேனி கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமான மழையும்,திருப்பூர், திண்டுக்கல், நெல்லை,தென்காசி,விருதுநகர் தூத்துக்குடி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது சற்று முன் வெளியிட்ட அறிக்கையின் படி
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.கடலில் 3.5 மீ. இருந்து 4. மீ., உயரம் வரை அலைகள் எழும்பக்கூடும். என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Previous articleஉணவே மருந்து:! மணத்தக்காளி கீரையை இப்படியும் அரைத்து சப்பிடலாம்!!
Next articleகுற்றம் செய்யாமல் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதி