பெண்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! தமிழ்நாடு அரசு பிறப்பித்த அதிரடி சலுகை?

0
68

தமிழகத்தில் அரசு சார்ந்த துறைகளில் பணியின் அவசர நிலை கருதி,தற்காலிக அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கின்றனர்.இந்த தற்காலிக பணியில் பாதி அளவு பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக பணியில் பணியாற்றி வரும் பெண்களுக்கு அவர்களின் பேறுகாலத்தின்போது விடுப்பினை எடுத்துக்கொள்ளலாம் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பேறுகால விடுப்பு யார் யாருக்கு பொருந்தும்?

குறிப்பாக தற்காலிக பணியில் நியமனம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு காலம் முடிவடைந்தவர்களே பேறுகால விடுப்பு எடுக்க முடியும்.

பேறுகால விடுப்பு இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.அதாவது மூன்றாவது பேறுகாலத்தில்,பேறுகால விடுப்பு அளிக்கப்படமாட்டாது.

முதல் பிரசவத்திலையே இரட்டை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அடுத்த பேறுகாலத்திற்கு பேறுகால விடுமுறை அளிக்கப்படும்.

குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் தற்காலிக பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு அளிக்கப்படமாட்டாது. என்று சீர்திருத்தத்துறைச் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.