துபாயிலிருந்து 191 பயணிகளுடன் கோழிக்கோட்டை வந்தடைந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்பொழுது இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் சிவிஆர் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த சிவிஆர் கருவில்
விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கும்.இந்த உரையாடல் மற்றும் விமானத்தின் கருப்பு பெட்டியை வைத்து தீவிர விசாரணை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் முரளிதரனுடன் டி.ஜி.சி.ஏ குழு ஒன்று இன்று கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைந்துள்ளது. இதனால், கோழிக்கோடு விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு வரும் அனைத்து விமானங்களும் கண்ணூர் மற்றும் கொச்சின் விமான நிலையயங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.